“ஷாந்தி மசோதாவை” நிறைவேற்றிய ஒரே வாரத்திற்குள் அணுசக்தி துறையை கைப்பற்றும் வேலையை துவங்கிய அதானி
லக்னோ நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் “நிலை யான பயன்பாடு மற்றும் இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தி மேம்பாடு (ஷாந்தி - Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India - SHANTI) மசோதா, 2025”-ஐ, “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மோடி அரசு நிறைவேற்றியது. மசோதா விவாதத்தின் போதே மக்களவை, மாநிலங்களவையில்,”நாட்டின் அணுசக்தித் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்து விடவே மோடி அரசு ஷாந்தி மசோ தாவை நிறைவேற்ற துடிக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள் ளிட்ட “இந்தியா” கூட்டணி எம்.பி., க்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஷாந்தி மசோதா வை நிறைவேற்றிய ஒரே வாரத் திற்குள் அணுசக்தி துறையை கைப் பற்றும் வேலையை துவங்கி யுள்ளார் பிரதமர் மோடிக்கு நெருங் கிய நண்பரான அதானி. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் 200 மெகாவாட் திறன் கொண்ட 8 சிறிய மாடுலர் அணு உலைகளை அமைக்க அதானி குழுமம் வேலை யை துவங்கியுள்ளது. இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) அதானி குழுமத்திற்காக இந்த 8 அணு உலை களை இயக்க உள்ளதாகவும், பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) இதர உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் “பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணைய இதழில்” செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 1,600 மெகாவாட் அணு சக்தித் திறனை அதானி குழுமம் பெறும். அதே போல அணு உலை களுக்குத் தடையற்ற நீர் விநியோ கத்தை உறுதி செய்ய, ஆற்றங்கரை யோரம் ஒரு தளத்தை அடையா ளம் காணும் பணியிலும் உத்தரப்பிர தேச மாநில அரசு ஈடுபட்டுள்ள தாக செய்திகள் (பிசினஸ் ஸ்டாண் டர்ட்) வெளியாகியுள்ளன. அம்பானியும்... அதானியை தொடர்ந்து பாஜக விற்கு அதிக நன்கொடை அளிக்கும் அம்பானி குழுமம், டாடா குழுமம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ (JSW) ஆகிய மற்ற முன்னணி நிறுவனங்க ளும் அணுசக்தி துறையில் நுழைய ஆர்வம் காட்டி வருவதாகவும், அதற்கான பணிகளை இந்திய அணுசக்தி கழகம், பாபா அணு ஆராய்ச்சி மையம் முன்னெடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-க்கு மட்டுமல்ல, மோடியின் நண்பர் அதானிக்காகவும் “ஷாந்தி மசோதா” நிறைவேற்றப்பட்டுள் ளது என காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணைய இதழின் ஸ்க்ரீன் ஷாட்டை டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் சேர் செய்து அவர் மேலும் கூறிகையில், “நாடாளுமன்றத்தில் ஷாந்தி மசோ தாவானது டிரம்ப் (TRUMP - The Reactor Use Management Programme - உலை பயன்பாட்டு மேலாண்மைத் திட்டம்) என்பதற் காக மட்டுமல்லாமல், அதானி (ADANI - Accelerated Damaging Adhiniyam for Nuclear India - அணுசக்தி இந்தியாவுக்கான துரி தப்படுத்தப்பட்ட பாதிப்புச் சட்டம்) என்பதற்காகவும் சேர்த்து வலுக் கட்டாயமாகத் திணிக்கப்பட்டது” என அவர் குற்றம்சாட்டினார்.
